மன்னாரில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அதிகம் பெண்களுடையது.

மன்னாரில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் அதிகம் பெண்கள் என சந்தோகிக்கின்ற மாதிரிகளும், 6 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. 227ஆவது நாளாக அகழ்வு பணியானது இன்று அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.