வவுனியா நகரில் பதற்றம்-பக்கசார்பாக செயற்படும் நகரசபை என குற்றச்சாட்டு!

வவுனியா நகரின் மத்தியில் சதொச விற்பனை நிலையம் முன்பாக அமைந்துள்ள நடைபாதையில் மறக்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளிற்கும் அதே பகுதியில் மறக்கறி கடைகளை நடாத்தி வரும் உரிமையாளர்கட்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் வீதி மறியல் போராட்டமும் இன்று (22.01.2019) காலை 9மணியளவில் இடம்பெற்றது.

 இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது குறித்த வீதியின் இரு பகுதிகளிலும் நடைபாதையில் மறக்கறி வியாபாரம் செய்வதால் குறித்த பகுதியில் பெரும் நெரிசல் ஏற்படுவதுடன் கடை வியாபாரிகள் சிலர் கடை வாடகை ,மின் கட்டணம் தொழிலாளர் சம்பளம் என பலவகையான இன்னல்களுக்கு மத்தியில் வியாபாரம் செய்வதால் குறித்த நடை வீதி வியாபாரிகளால் தமக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கடை வியாபாரிகள் தெரிவிப்பதுடன் குறித்த மறக்கறிகளை கழிவு நீர் செல்லும் கால்வாயின் மேல் வைத்து நடைபாதை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர் இது பெரும் சுகாதார சீர்கேட்டை கொண்டுவரும் எனவும் குற்றம் சாட்டினர் எனவே நகரசபை இதற்கு சரியான தீர்வு தர வேண்டும் என்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இதன்பொழுது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிது கைகலப்பும் ஏற்பட்டது

 மேலும் இது தொடர்பாக நடைபாதை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில் தாம் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருபவர்கள், அன்றாடம் இத்தொழிலில் கிடைக்கும் வருமானத்தை கொண்டே எமது வாழ்க்கைத்தரத்தை கொண்டு செல்கிறோம் என்பதுடன் மொத்த விற்பனை நிலையத்திலிருந்து 500 மீற்றர் எல்லைக்குள் வேறு எந்த மறக்கறி வியாபார நிலையமும் அமைக்க முடியாது ஆனாலும் இங்கிருக்கும் கடைகள் அந்த எல்லைப்பகுதிக்குள் தான் இருக்கின்றது எனவே எமக்கும் உரிமை உண்டு என்றதுடன் நகரில் நாம் மட்டுமா நடைபாதை வியாபாரம் செய்கிறோம்? பள்ளிவாசல் பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளும் நடைபாதை வியாபார நிலையங்களே அவற்றையும் வவுனியாவில் உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் அகற்றப்படுமாயின் நாமும் இங்கிருந்து செல்கிறோம் என தெரிவித்தனர்.


 மேலும் அவர்கள் தெரிவிக்கையில் வவுனியா நகரசபை அவற்றை எல்லாம் அகற்றாமல் பக்க சார்பாக செயற்பட்டு எமது வாழ்வாதாரத்தை அழிக்கின்றது எனவும் குற்றம் சாட்டினர் இதேவேளை குறித்த பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து பெருமளவு பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதுடன் நகரசபையினர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நடைபாதையில் விற்பனை செய்த பொருட்களை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத்தில் ஏற்றி சென்றனர் இதன்போது வாகனத்தில் ஏறிச்சென்ற நடைபாதை வியாபாரிகள் நகரசபை செல்லும் வழியில் வாகனத்தை விட்டு குத்தித்து சென்றுவிட்டனர் என்றும் பொருட்களை கைவிட்டு சென்றுவிட்டனர் என்றும் நகரசபையினர் தெரிவிக்கின்றனர் ஆனாலும் இவற்றுக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் நகரசபை தெரிவிக்கின்றது.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.