கடற்படை வசம் இருக்கும் எங்கள் காணிகளை பெற்றுத்தாருங்கள் இரண்டாவது நாளாகவும் தொடரும் சிலாபத்துறை மக்களின் மண் மீட்பு போராட்டம்!!!



மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் புதன்கிழமை (20.02.2019) பிற்பகல் முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர்.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திரும்பியுள்ளனர்.

சொந்த இடங்களுக்கு மீண்டும் வந்த மக்கள் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு, கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மக்கள் 'கடற்படையே வெளியேறு', 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்', 'கடற்படையே எம் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் குடியேற்ற வழி செய்', 'கடற்படை முகாமை மாற்ற 10 வருடங்கள் காணாதா?', 'கடற்படையே எமது பூர்வீக நிலத்தில் வாழும் உரிமையை தா', எனக் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.