ஞானசார தேரரை சந்திக்க சிறைக்கு சென்ற அமைச்சர்கள் மனோ, ரவி!!!
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நலன் விசாரிப்பதற்காக அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
செய்யாத குற்றத்தை குற்றச்சாட்டு பத்திரத்தில் சேர்த்து அதனை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தி தன்னை அநீதியான முறையில் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசார தேரர் தன்னை சந்தித்த அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.
ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல் நல குறைவு காரணமாக அவர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




Post a Comment