இலங்கை கிரிக்கெட் வரலாற்றை மீட்டு பார்க்க அருங்காட்சியகம் திறந்து வைப்பு!!!


இலங்கை அணியின் பழம்பெரும் வரலாற்றை உலகிற்கு காண்பிக்கும் முகமாக கிரிக்கெட் அருங்காட்சியகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தலைமையில் குறித்த அருங்காட்சியகம் இன்று (20) காலை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையிலான அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்கிண்ணங்கள், சாதனை வீரர்களின் புகைப்படங்கள் என்பன அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி பெற்றுக்கொண்ட உலகக்கிண்ணம், 2014 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட T-20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய போட்டியில் பெற்றுக்கொண்ட கிண்ணங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விழாவில் இலங்கை  அணியின் தலைவர் லசித் மாலிங்க, கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேலும் அருங்காட்சியகத்திற்கு செல்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.