சுமதிபால தரப்புக்கு வெற்றி! புதிய தலைவராக ஷம்மி சில்வா!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ( SLC) புதிய தலைவராக ஷம்மி சில்வா (Shammi Silva) இன்று (20) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய நிர்வாகசபையை 2019 -2021 ( தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர்,) தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷம்மி சில்வாவுக்கு ஆதரவாக 83 வாக்குகளும், அவரை எதிர்த்துப்போட்டியிட்ட ஜயந்த தர்மதாஸவுக்கு 56 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தரப்பு வேட்பாளராகவே ஷம்மிசில்வா போட்டியிட்டார். திலங்கவின் நிர்வாகத்தின்கீழ் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இவர் பதவி வகித்தார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜ{ன ரணதுங்கவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்விகண்டுள்ளார். இம்முறை தமது தரப்பே வெற்றிபெறும் என ரணதுங்க அறிவிப்பு விடுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shammi Silva has been elected president of Sri Lanka Cricket. Drawing in 83 out of a possible 142 votes Silva, a candidate backed by former president Thilanga Sumathipala, beat Jayantha Dharmadasa, who received 56 votes.

Post a Comment