எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவைச் சந்திக்கும்: ஆருடம் குருகிறார் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்
மலையகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கம் பின்னடைவைச் சந்திக்கும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றது.
அரசாங்கம் இன்று மலையகப் பகுதிகளைப் புறக்கணித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்புறக்கணிப்பை மறுசீரமைத்து மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அரசுக்கு ஒர் பின்னடைவை ஏற்படுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment