ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து



லங்கையின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மானுடவியல் பீடத்தில் ஜப்பான் மொழி (ஆய்வுகூட) பிரிவுக்கு 12 மில்லியன் பெறுமதியான மானிய உதவி வழங்குவதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் பிரஸ்தாப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி பி.ஏ. கருணாரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.



ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, ஜப்பான் தூதரக கலாசார பிரிவின் தலைமை அதிகாரி காவாக்காமி ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர். இலங்கையில் பத்தாயிரம் பேர் ஜப்பான் மொழியை கற்கின்றனர். களனி, சப்ரகமுவ, ரஜரட்ட ஆகிய பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி போதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.