கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!!!



கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழுக் கூட்டம் இன்று (18) முற்பகல் விளிம்புல, ஹேனேகம பிரதேசத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர்களினால் மாவட்டங்களின் கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றியும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அந்த வகையில் இரண்டு கிராமசக்தி சங்கங்களுக்கிடையே இன்று ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராமசக்தி சங்கத்திற்கும் லங்கா “ஹெலஒசுபென்” கிராமசக்தி சங்கத்திற்கும் இடையில் கீரை உற்பத்திகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, லசந்த அழகியவன்ன, ஹர்சன ராஜகருணா, மேல் மாகாண ஆளுநர் அஷாத் சாலி, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.