பங்களாதேஷ் - போதைக்கு எதிரான யுத்தம், நூற்றுக்கணக்கான தாதாக்கல் சரண்.


பங்களாதேஷ் அதிபர் ஷேய்க் ஹஸீனா போதைக்கு எதிராக கடுமையான போக்கினை கையாண்டு வருவதோடு பங்களாதேஷும் பிலிபைன்ஸ் நாட்டின் அதிபர் போதைப் பொருள் ஒழிப்பிற்காக முன்னெடுத்த திட்டத்தை போல்  திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல், மற்றும் விற்பனையுடன் தொடர்பான 300 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 25000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அரசின் போதை ஒழிப்பு போக்கினை கண்டு நூற்றுக்கணக்கான போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரசிடம் சரணடைய முன் வந்துள்ளனர்.

பங்களாதேஷின் டெக்னாப் நகரில் நேற்று (17) நடைபெற்ற ஒரு நிகழ்வில் உள்துறை அமைச்சர் அஸதுஸ்ஸமான் கான் முன்னிலையில் சுமார் 100 பேர் சரணடைந்துள்ளனர். இவர்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பாதாள உலக தலைவர்களுட் அடங்குவதாக தெரியவருகின்றது.

இந்த நிகழ்வின்போது அவரகள் "Yaba" என அழைக்கப்படும் 350000 போதை மாத்திரைகளையும், நூற்றுக்கணக்கான சட்டவிரோத ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

பங்களாதேஷ் அரசு 1151 போதைப் பொருள் கடத்தல்காரர்களை பட்டியலிட்டுள்ளது. அவர்களில் 73 பாதாள உலக தலைவரகளும் அடங்குவர். குறித்த அந்த 73 நபர்களில் 24 பாதாள உலக தலைவர்களும் நேற்று நடைபெற்ற  நிகழ்வில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் "Yaba" போதை மாத்திரையை சுமார் 7 மில்லியன் மக்கள் பாவிப்பதாகவும் கடந்த 2018ம் ஆண்டு சுமார் 53 மில்லியன் "Yaba" மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பு செய்தி வௌியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.