குப்பை பிரச்சினை – தவறாக புரிந்து கொண்ட கொழும்பு மற்றும் பிறமாவட்ட மக்கள்!!!



அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற குப்பை தட்டும் திட்டத்திற்கு எதிரான மாபெரும் ஆரப்பாட்டத்தை தொடர்ந்து இத் திட்டத்தை ஆதரிக்கும் அமைச்சர் சம்பிக்க மற்றும் ஜனாதிபதி இந்த திட்டம் நடைபெற்றே தீரும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து சக்தி டிவி மின்னல் நிகழ்ச்சியில் இது சம்பந்தமான நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. இதில் பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்களின் தனிப்பட்ட பிரச்சனையாக காட்டப்பட்ட இந்த பிரச்சினை அனைத்து சமய தலைமைகளும் குப்பைக்கு எதிராக போராடுவதினால் அரசிக்கு மேலும் அழுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் பிற மாவட்ட மக்கள் “புத்தள மக்கள் போராடுவது தேவையற்றது, இலங்கை குப்பையை இலங்கையில் தான் கொட்டவேண்டும்” என்று பலவாறு கருத்து தெரிவிகின்றனர். இலங்கை சட்டப்படி ஒரு பிரதேசத்தின் குப்பைகள் அதன் எல்லைகளுக்குள் தான் பராமரிக்கப்பட வேண்டும்.

கொழும்பிலிருந்து 135 KM களுக்கு அப்பால் இருக்கும் புத்தளத்திற்கு குப்பைகள் கொண்டு வரப்பட இருகின்றது. முதலாவது குப்பைகளை பாதையூடாக கொண்டு வருவதினால் கொழும்பிலிருந்து புத்தளம் வரைக்குமான பாதைகளில் துர் நாற்றம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. மேலும் ஒவ்வொரு நாளும் 1800 டொன் அளவிலான குப்பை கொண்டுவரப்பட இருகின்றது. இதற்கான வாகன செலவு மற்றும் டீசல் செலவு கோடிக்கணக்கில் கைமாற்றப்பட இருகின்றது.

மேலும் இந்த செயற்றிட்டம் நடைபெற இருக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் கடல் இருகின்றது. இந்த திட்டம் 80 வருடங்களுக்கு செயற்படுத்தப்பட இருகின்றது. ஆகவே நாளடைவில் குப்பையிலிருந்து வெளியாக கூடிய லீச்சட் எனும் திரவம் கடலோடு மற்றும் நிலகீழ் நீரோடு கலக்கப்படும் போது மிக கொடிய நோய்களுக்கு புத்தளம் மக்கள் முகம்கொடுக்க நேரிடும். இந்த திட்டத்தால் எந்த பாத்திப்பும் இல்லை என சொல்லும் அமைச்சர்களும் ஜனாதிபதியும் 80 வருடங்களின் பின் பொறுப்பு கூற போவதும் இல்லை. ஏற்கனவே புத்தள மக்கள் சீமெந்து தொழிற்சாலையினால் ஆஸ்த்மா போன்ற சுவாச நோய்களாலும் , அனல் மின்சார நிலையத்தினால் கேன்சர் போன்ற கொடிய நோய்களாலும் தினந்தோறும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த குப்பையினால் எதிர்கால சந்ததியினர் ஊனமாகவும், புத்தி குறைபாடோடும் பிறப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.

குப்பைகளை பராமரிப்பதற்கும் மீள் சுழற்சி செய்வதற்கும் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்த நிலையிலும், அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே வெற்றிகரமாக செய்யமுடியாத இத் திட்டத்தை புத்தளத்தில் நிருவ இருப்பதற்கான காரணம் மற்றும் உலக வாங்கினால் தடை செய்யப்பட சைனா ஹார்பர் நிறுவனத்திடம் கொடுத்து இந்த திட்டம் முன்னெடுத்து செயற்படுவதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது..

சம்பிக்கவின் டீல் மிகப் பெரியது...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.