ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கை பற்றிய கலந்துரையாடல் நஜீப் ஏ மஜீட் தலைமையில் இடம்பெற்றது!!!
-ஊடகப் பிரிவு-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இன்று 2019/02/19 (செவ்வாய்கிழமை) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்திகள் சம்பந்தமாக இவ் ஒன்று கூடலில் கலந்தாலோசிக்கப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.








Post a Comment