பூனைக்குப் பயந்து புலியிடம் மாட்டாதீர்!


தேசிய காங்கிரஸ் வானில் நம்பிக்கை நட்சத்திரமாய் மிளிர்ந்த தளபதி MS. உதுமாலெப்பை அவர்களை மனமுவந்து நேசித்தவர்கள் நாம். கட்சி என்பது பெயர் அல்ல, கட்சி என்பது சின்னம் அல்ல, கட்சி என்பது கொள்கை என்ற கோஷம் இரத்தத்திலும் நாடிநரம்புகளிலும் ஊறிப்போனவர்கள் நாம். விசுவாசத்துடன் இணைந்த இதயங்கள் என்பதால் உங்கள் பிரிவை நினைத்து வேதனையடைகின்றோம்.
“சட்டியில் இருந்து அடுப்பில் குதிக்காதீர்கள்” என்று மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு நாம் கூறியபோது, மலர்ந்த முகத்துடன் நீங்களும் புண்ணகைத்தீர்கள். உங்களுக்கு தலைவர் அதாவுள்ளாவை அல்லது கட்சிப் போராளிகளை விட்டுப்பிரியவேண்டிய தேவைகள் அல்லது மனக்கசப்புகள் ஏற்பட்டருக்கலாம். அதை நான் மறுக்கவிமில்லை விமர்சிக்கவுமில்லை. ஆனால் அரசியல் கொள்கைகளில் தேசிய காங்கிரஸின் நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் நீங்களும் தளபதியாய் நின்றே வகுத்தீர்கள். அந்தக் கொள்கைகள் வேறு எந்தக் கட்சியிலும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற விடயம்.
இமாமுடன் கோபித்துக்கொண்டு பள்ளியை வெறுத்து பன்சலைக்கு போவீர்கள் என்று நான் நம்பவில்லை. நீங்கள் அப்படியானவர் என்று நன் இதுவரை அறியவுமில்லை. அரசியலில் நீங்கள் உறுதிகொண்ட கொள்கையுடையவராயின் புதிய பாதையை அமைத்துக்கொள்ளுங்கள்! அதற்காக பூனைக்குப் பயந்து புலியிடம் மாட்டாதீர்கள்! என நட்புடன் வேண்டிக்கொள்கிறேன். உங்களது இறுதி முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள்!
சமூகத்திற்கு சிறந்த முடிவை இறைவன் நமக்கு வழங்குவானாக!
உஸ்தாத் சபா முஹம்மத் 
கலாசார மற்றும் மத விவகார செயலாளர்
உயர்பீட உறுப்பினர் - தேசிய காங்கிரஸ்
2019.02.21

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.