முக்கிய தீர்மானம் எடுக்கத் தயாராகும் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்?


முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்றுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது.
இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவுடன் முழுமையான முரன்பாட்டுடன் உள்ள முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் அன்மைக்காலமாக ஏறாவுர் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒதுக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் கட்சித்தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இது விடயத்தில் தனக்கு நியாயம் செய்யவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வருத்தப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவுக்கும், கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கும் பாடம் கற்பிப்பதற்கு இது சரியான தருணம் இல்லை என்றும் ஒரு தேர்தல் வரும் வரைக்கும் அமைதி காப்பதே நல்லதாகும் என்று நஸீர் அஹமட் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.