இந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி ஊழலுக்கு தண்டனை வழங்க முடியாது- ஜனாதிபதி


மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தை நடாத்தும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பது சாத்தியமற்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தேன். 

விசாரணை தற்பொழுது முடிந்துள்ளது. இந்த ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு விடயத்தையும் இதுவரையில் நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை. ஒன்றில் இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த அரசாங்கத்திலிருந்து விலக்க வேண்டும். அல்லது இவர்கள் இல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அப்போதே இந்த ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இயலுமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் 61 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இந்நிகழ்வில், சபாநாயகர், கோப் குழு தலைவர் சுனில் ஹதுன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.