போதைப்பொருள் முற்றுகையில் அதிரடிப்படையின் பணிக்கு பிரதமர் பாராட்டு
பொலிஸ் விஷேட அதிரடிப்படை மேற்கொள்ளும் போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட குற்றச்செயற்களை முற்றுகையிடும் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் இந்த படையணி கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம் ஆர் லதிவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் பாராட்டை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையிலிருந்து நாட்டை மீட்டெடுத்தும அதனுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்களை இல்லாதொழிக்கும் நோக்குடன் இதனுடன் தொடர்புப்பட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் விஷேட அதிரடிப்படை கண்டுள்ள வெற்றி பாராட்டத்தக்கது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

Post a Comment