மஸ்தான் எம்.பி நிதி ஒதுக்கீட்டில் போடப்பட்ட உப்புக்குளம் வடக்கு வீதி மாயமானது !!!

மன்னார் உப்புக்குளம் வடக்கில் முன்னாள் பிரதியமைச்சர் மஸ்தான் எம்.பி 5இலட்சம் ரூபா நிதியில் போடப்பட்ட கிறவள் வீதி மயமாகியுள்ளது....

மேலும் தெரியவருவாவது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மூலமாக மன்னார் உப்புக்குளம் வடக்கில் வாழும் மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்துவந்த வீதியை செப்பனிடுவதற்கு மீள் குடியேற்ற செயலணி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் மூலம் துரித அபிவிருத்திகள் ஒதுக்கீடுகளில் எல்லாம் அறிந்த விடயம்..

இக்கால பகுதியில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் உப்புக்களும் வடக்கு  வீதியை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து குறுகிய காலத்தினுள் வேலைமுடிந்து விட்டதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீனால் செய்யப்பட்ட வீதியினை காட்டி பணம் எடுக்கப்பட்டுள்ளதை  அறிந்த மக்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்...

மக்களின் கேரிக்கையை அடுத்து மன்னார் மாவட்ட கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் களத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தபோது நிலைமைகள் வேறாக இருந்தது போடப்படாத வீதிக்கு வேறு வீதியைக்காட்டி பணம் எடுக்கப்பட்டதையும்  அறிந்த அதிகாரிகள் உடனே எடுக்கப்பட்ட பணத்திற்கு வீதி போடப்படவேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் ..

மீண்டும் மாயமான வீதி வருமா என்ற எதிர்பார்ப்பில் உப்புக்குள வடக்கு வாழ் மக்கள் விடைகிடைக்குமா???

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.