இணைத் தலைமையிலிருந்து காதர் மஸ்தான் அங்கஜன் ராமநாதன் - நீக்கம்!!
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இதுவரை காலமும் இணைத் தலைமைப் பதவிகளிலிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள தாக, மாவட்டச் செயலர்களுக்கு அரச தலைவர் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு அரசின் காலத்தில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இணைத் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்கள்.
கூட்டு அரசு முறிவடைந்த பின்னர், வடக்கில் எந்தவொரு மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறவில்லை. சில மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒரு வருடத்துக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், அரச தலைவர் செயலகத்தால் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைகள் தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் இணைத் தலைமை பதவியை வகித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் இருவருமே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment