60 ஆயி­ரம் பேர்­வரை வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் இருப்­பது பேர­ழிவு எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

10 இலட்­சம் தொழில்­வாய்ப்­புக்­கள் தொடர்­பாக தேர்­தல் மேடை­க­ளில் வாக்­கு­று­தி­களை வழங்­கிய கட்சி, அரச அதி­கா­ரத்தை வகிக்­கும்­போது 60 ஆயி­ரம் பேர்­வரை வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் இருப்­பது பேர­ழிவு என்று தெரி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

நாடா­ளு­மன்­றில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்கைப் பல்­க­லைக் கழ­கங்­க­ளில் கல்­வி­யைப் பெற்று புத்­தி­ஜீ­வி­கள் என உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டு வர­லாற்­றில் ஒரு­போ­தும் இல்­லாத அள­வுக்கு வேலை­யற்­றி­ருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை உயர்­வ­டைந்­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது.

இவ்­வாறுவேலை­யற்­றி­ருக்­கும் பட்­ட­தா­ரி­க­ளின் எண்­ணிக்கை 57 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­கும். ஆண்­டு­தோ­றும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளின் வீதம் அதி­க­ரித்­துச் செல்­வது அர­சின் இய­லா­மை­யைக் காட்­டு­கின்­றது. 10 இலட்­சம் தொழில்­வாய்ப்­புக்­கள் தொடர்­பாக தேர்­தல் மேடை­க­ளில் வாக்­கு­று­தி­களை வழங்­கிய கட்சி, அரச அதி­கா­ரத்தை வகிக்­கும்­போது 60 ஆயி­ரம் வரை­யி­லான பட்­ட­தா­ரி­கள் தொழி­லற்று இருப்­பது பேர­ழிவு.

அனைத்­துப் பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் தொழில் வழங்­கு­வ­தாக தெரி­வித்து, சுமார் 50 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­களை நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு அழைக்க கடந்த வரு­டம் நட­வ­டிக்கை எடுத்­த­போ­தும் அவர்­க­ளில் 5 ஆயி­ரத்து நூறு­பே­ருக்கே தொழில் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று அர­சின் புள்ளி விவரங்­க­ளில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பல­ருக்கு அநீதி இழைப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுப்­பதை ஒரு­போ­தும் அனு­ம­திக்க முடி­யாது.

எனவே 2012ஆம் ஆண்­டில் 48 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­களை அரச சேவை­யில் இணைத்­துக்­கொள்ள எமது அரசு பின்­பற்­றிய முறை­மையை முன்­மா­தி­ரி­யா­கக்­கொண்டு பட்­ட­தா­ரி­களை வகைப்­ப­டுத்­தா­மல் வேலை­யற்ற அனைத்­துப் பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் பொருத்­த­மான தொழிலை அரசு பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் – என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.