சவுதி இளவரசர் தலைமையிலான தூதுக் குழு நாளை இந்தியா விஜயம்!!!.
பாகிஸ்தானுக்கான மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நாளை (20) இந்தியாவின் தலைநகர் புதுடில்லியை நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி இளவரசர் தலைமையிலான குழுவில் சவுதி அமைச்சர்கள் மட்டுமன்றி அந்நாட்டின் முன்னணி வர்த்தகர்கள் குழுவொன்றும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சவுதி இளவரசர் தலைமையிலான குழுவை வரவேற்பதற்கு இந்தியா பாரிய ஏற்பாடுகளை செய்து வருவதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு இக்குழு சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் அச்செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Post a Comment