கிளிநொச்சி போராட்டத்தில் தாக்குதல் நடாத்த முயற்சித்தவா்கள் கைது செய்யப்படுவார்களா?
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில் ஊடகவியலாளா்கள் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்தவா்கள் தொடா்பில் உடனடியாக விசாரணைகளை நடாத்துமாறு வடமாகாண ஸ்ரீலங்கா சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபா் றொஷான் பொ்னாண்டோ உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
யாழ்.ஊடக அமையத்தினால் அவருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி உத்தரவை கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் விடுத்துள்ளார்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நேற்று திங்கட்கிழமை ஆரம்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இப் பேரணியில் குழப்பம் விளைவிக்க வந்த சிலரால், அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.இவ்விடயம் தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.ஊடக அமையத்தின் சார்பில் முறைப்பாடு இன்று செவ்வாக்கிழமை மாலை பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டினை ஏற்றுக் கொண்ட அவர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

Post a Comment