இனிமேல் அனுமதி வழங்கப்பட்ட பாடல்கள் மாத்திரமே ஒலி / ஒளிபரப்பாகும்
பஸ்களில், அனுமதி வழங்கப்பட்ட காணொளி மற்றும் பாடல்களை மாத்திரம் ஒலி / ஒளிபரப்புவதை கட்டாயமாக்குவதற்கு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பஸ்களில் ஒலி மற்றும் ஒளிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கலாசாரத்திற்கு ஒவ்வாத காட்சிகள் ஒளிபரப்பாகுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி தெரிவித்துள்ளார்.
பஸ்களில் ஒலி/ ஒளிபரப்பாக்குவதற்கான பாடல்கள் மற்றும் காணொளிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாடல்களுடன் தொடர்புடைய கலைஞர்களிடமும் அதற்கான அனுமதியைப் பெற்று, குறித்த இருவட்டுக்களை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment