பெற்ற மகளை மோசமாக துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் சித்தப்பா! கொழும்பில் நடந்த கொடூரம்
பெற்ற மகளை மோசமாக துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் சித்தப்பா! கொழும்பில் நடந்த கொடூரம்.
தென்னிலங்கையில் 15 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவரது தந்தை மற்றும் சித்தப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய இந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தனியாக பிரிந்துள்ள நிலையில் அவர்களின் பிள்ளைகள் நீதிமன்றம் ஊடாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் தம்பி இணைந்து சிறுமியை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பாட்டியிடம் சிறுமி கூறிய போது அப்பா மற்றும் சித்தப்பா அப்படி செய்வாரா என கூறி சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலையில் உறவுக்கார சகோதரியிடம் இந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். அவர் இது தொடர்பில் கொழும்பில் உள்ள தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய சிறுமியின் அப்பா மற்றும் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment