இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைபொருட்களை (ஹொரோயின்) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும்,விஷேட அதிரடிப்படை கட்டளைத்தளபதி DIG - Latheef அவர்களும் பார்வையிட்டனர். !
இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைபொருட்களை (ஹொரோயின்) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும்,விஷேட அதிரடிப்படை கட்டளைத்தளபதி DIG - Latheef அவர்களும் பார்வையிட்டனர். !
கொழும்பு, கொள்ளுபிடி பகுதியல் உள்ள சூபர் மார்கட் கட்டிடம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து நேற்றைய தினம் 2945 மில்லியன் மதிக்கத்தக்க 294 கிலோ 490 கிராம் ஹெரொயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுவே உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய ஹெரொயின் தொகை இதுவென பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளுபிடி பகுதியல் உள்ள சூபர் மார்கட் கட்டிடம் ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு இரண்டு வேன் வண்டிகளில் இந்த ஹொரொயின் தொகை கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களிலிருந்து 10 பயணப்பைகளில் பொதியிடப்பட்ட 272 சிறிய பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விவகாரம் தொடர்பில் பாணந்துர, சரிகமுல்ல, கெசெல்வத்த பகுதியை சேரந்த மொஹமட் பஷீர் மொஹமட் அஜ்மீர் மற்றும் மொஹமட் ரிலா அஹமட் ருஸ்னி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைபொருட்களை (ஹொரோயின்) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பார்வையிட்டார்..






Post a Comment