முஸ்லிம் பாடசாலையை ஒழிக்கும் திட்டமா முன்மாதிரிப் பாடசாலை?
நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளைத் திறக்க வேண்டுமென்று நான் கூறியதும் என்னை தாக்க ஆரம்பித்தனர் என மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
நாம் மேல் மாகாணத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்க உள்ளோம். இதில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்பர். இதனால் புரிந்துணர்வு, இன ஐக்கியம் ஏற்படும்.
சகல சமயத்தினர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.
பாணந்துறை, அம்பலாந்துவையில் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சகல சமயத்தவர்களும் கல்வி பயிலும் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். திட்டமிட்ட முஸ்லிம் பாடசாலையை அமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாம் மேல் மாகாணத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்க உள்ளோம் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ள தனித்துவங்களை பாதுகாப்பதற்கு துணிவில்லாதவர்கள் உயர் பதவிகளுக்கு வரும்போது பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தி தனது பதவியை தக்க வைக்க முன்வருவது, ஆச்சரியப்படக் கூடிய ஒரு விடயம் அல்லவென சாதாரண பாமர மக்களும் வாய் திறக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது அரசியல் தலைவர்களுக்கு ஓர் அபசகுணமாகும்.

Post a Comment