SACOSAN மாநாடு இம்முறை இலங்கையில்!!!
SACOSAN என அறியப்படும் சுகநல பாதுகாப்பு நிலையான தீர்வு பற்றிய தெற்காசிய மாநாடானது பெப்ரவரி மாதம் 21 தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு Berjaya ஹோட்டலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
குறித்த மாநாநடானது நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பிற்கான பிராந்திய மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நீர் மற்றும் சுகாதார பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் பலர் பங்கேற்கவுள்ளதோடு இதன் போது தெற்காசிய பிராந்தியத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார துப்பரவிற்கான தீர்வுகள் பற்றி கலந்தாலோசிக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து அரச அதிகாரிகள், அறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மூன்று நாள் மாநாடானது நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன ஆகியோரின் தலமையில் நடாத்தப்படும்.

Post a Comment