அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜனாதிபதியிடம் இணக்கம்

அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வ கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பீ. திகாம்பரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம, டிலான் பெரேரா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
அரசியலமைப்பு திருத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை என்பன குறித்து நிலவும் கருத்து முரண்பாடுகளுக்கு இதே சந்தர்ப்பத்தில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கடசித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் பிரகாரம் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து வடக்கு முதலமைச்சர் மாதத்திரமின்றி, தென் மாகாண முதலமைச்சரும் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை தொடர்பிலும் நேற்றைய சர்வ கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.