கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினுடாக வீடுகட்டுவதற்கு வசதி இல்லாதவர்களுக்கு பண உதவி வழங்கி வைப்பு.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினுடாக வீடுகட்டுவதற்கு வசதி இல்லாத 23 பேருக்கு தலா ஒருஇலட்சித்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான காசேலையினை கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார். இந் நிகழ்வு கிழக்கு ஆளுநர் செயலகத்தில் இன்று இடம் பெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவர் எம்.எஸ். சுபைர் ,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment