சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…



“திறமையான பெண்கள் – அழகான உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இன்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

2019 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரகடனம் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய ரீதியாக சிறப்பான பணிகளை மேற்கொண்ட பெண்கள் ஜனாதிபதி அவர்களினால் பாராட்டப்பட்டதுடன், அநுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி அவர்களினால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார, அமைச்சர் தலதா அத்துகோரள, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தர்ஷனி சேனாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகெண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.