நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்காக சூரிய சக்தி திட்டங்களை வழங்குதல், விதைகள், மரக்கன்றுகளை வழங்குதல், விவசாய உபகரணங்களை வழங்குதல் மற்றும் சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாய ஓய்வூதியம் வழங்குதல், நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்குதல், காணி உறுதிகளை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் சமூக சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலிகளை வழங்குதல், சுய தொழில் உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாலித்த ரங்கே பண்டார, ஹெக்டர் அப்புகாமி. விக்டர் அந்தோனி உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்த உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Post a Comment