புத்தளம் மாவட்ட “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…
புத்தளம் மாவட்ட “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் நிலையம் இன்று (22) ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.
“ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment