வன்னி அறுசுவை உணவகம் நெடுங்கேணியில் திறந்துவைப்பு!!!
வவுனியா, நெடுங்கேணியில் அறுசுவை உணவகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வைபவரீதியாக திறந்து வைத்தார்.
காலை 9 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைதிட்டங்கள் பற்றியும், எதிர்காலத்தில் மேற்கொள்ளபடவுள்ள வேலைதிட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி அதன்பின்னர் உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, பிரதேசசெயலர் க.பரந்தாமன், அரச அதிகாரிகள், பொலிசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment