எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!!


எரிபொருட்களின் விலையை இன்று(12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வகையில், டீசல் ஒரு லீட்டரின் விலை ஒரு ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதியே எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி விலை மாற்றம் இடம்பெற்று வருகின்றது. இம்மாதம் 13 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.