கட்புலனற்ற இரட்டை சகோதரிகளுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு….


கட்புலனற்ற இரட்டை சகோதரிகள் இருவரின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் (26) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.


வர்ணகுலசூரிய சந்துனி பேஷலா மற்றும் ருக்ஷானி மேகலா ஆகிய இவ்விரு மாணவிகளும் முந்தல் சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்விகற்று க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்து தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பீடத்தில் உயர் கல்வியை கற்று வருகின்றனர். 

கடந்த வருடம் ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் புத்தளம் மதுரங்குளியில் இடம்பெற்ற கிராமசக்தி செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இம்மாணவிகள் இருவரினாலும் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக கட்புலனற்றவர்கள் பாவிக்கக்கூடிய விசேட மென்பொருள் அடங்கிய மடிக் கணனிகள் இரண்டினை ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.