நன்மை – தீமை பற்றி ஆராய்ந்தபின் முடிவு! சம்பந்தர் ஆணித்தரம்!!!


தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
கடனிலிருந்து நாட்டினை மீட்டெடுப்பது, நாட்டின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்றன இந்த வரவு செலவு திட்டத்தில் அடங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விடவும் தீமைகள் இல்லை என கூறலாம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.