பஸ் விபத்தில் 06 பேர் காயம்!!!

ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 06 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ருவான்வெல்லையிலிருந்து அவிசாவளையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ் வண்டி, வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.