வன்னியிலிருந்து மஹிந்தவை தேடிச் சென்ற 750 பட்டதாரிகள் சார்பான குழுவினர்
வன்னியிலிருந்து மஹிந்தவை தேடிச் சென்ற 750 பட்டதாரிகள் சார்பான குழுவினர்
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை வன்னி மாவட்ட பட்டதாரிகள் குழுவென்று இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
750 பட்டதாரிகள் சார்பில் இந்த குழுவினர் எதிர்க்கட்சி தலைவரை நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.
இதன்போது வன்னி மாவட்ட அபிவிருத்தி, கல்வி மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 2015ஆம் ஆண்டிற்கு பின்னராக காலப்பகுதில் வன்னி பெரு நிலப்பரப்பில் எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மஹிந்தவிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் இது குறித்து எந்தவித தகவல்களையும் வெளிக்கொணரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Post a Comment