கோத்தா மீது அமெரிக்காவில் வழக்கு: அழைப்பாணையை கையில் கொடுத்த சட்டத்தரணி

அமெரிக்காவிற்கு தனிப்பட்ட பயணமாக சென்றிருந்த இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இரண்டு வழக்குகள் நேற்று பாய்ந்திருந்தன. கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவின் மகள், மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் சார்பில் கனடிய தமிழர் ரோய் சமாதானம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இரண்டு வழக்குகளின் அழைப்பாணையை கோத்தபாய ராஜபக்சவிடம், சட்டத்தரணியொருவர் அமெரிக்காவில் வைத்து வழங்கியிருந்தார்.
கலிபோர்னியாவிலுள்ள விற்பனை நிலையமொன்றின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து கோத்தபாயவிடம் அழைப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அழைப்பாணைகளை பெறும்போது கோத்தபாயவின் முகத்தில் இயல்பற்ற தன்மை தெரிவதை அவதானிக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.