கைதுசெய்யப்பட்ட தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுதலை!
வடதமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று 31.03.19 அன்று மாலை இவர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு 01.04.19 அன்று காலை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இவரது வழக்கினை விசாரணை செய்த நீதவான் இவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தீவிர உறுப்பினர்களுக்கிடையில் மோதல்கள் வலுப்பெற்று வரும் நிலையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு தமிழரசு கட்சி மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வாறானவர்களுக்கு அடுத்துவரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment