கற்பிட்டி முதலைப்பாளியில் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி. கெளரவ காதர் மஸ்தான் பிரதம அதிதி

கற்பிட்டி முதலைப்பாளி அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் நிவ்பிரண்டஸ் அல் இக்பால் விளையாட்டுக் கழகம் நடாத்திய காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இறுதிச்சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்த கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் வெற்றிக்கிண்ணம் வழங்கும் நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இறுதிப்போட்டியில் விறுவிறுப்பாக ஆடிய கற்பிட்டி உதைபந்தாட்டக் கழகம் வெற்றியை தனதாக்கியது.
இப்போட்டி நிகழ்வில் முதலைப்பாளி அ.மு.வி அதிபர் ஜனாப்.முஷாதிக் பள்ளி பரிபாலனசபை தலைவர் ஜனாப்.மக்கீன் கற்பிட்டி பகுதி ஸ்ரீ.ல.மு.கா உயர்மட்ட உறுப்பினர் ஜனாப் முஸம்மில் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.