பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காணொளி!
இலங்கையின் பிரபல சிங்கள நடிகையான பியுமி ஹன்சமாலி சில ஆண்களால் கொடுமையாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
சிங்கள சினிமாவின் நடிகையும் மொடலுமான பியுமி ஹன்சமாலி என்ன காரணத்துக்காக இவ்வாறு தாக்கப்படுகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனாலும் காணொளியிலுள்ளதைப்போல் குறித்த பெண்ணைத் தாக்கும் நபர் இது பியுமி ஹன்சமாலி என்று கூறியவாறே தாக்குதல் நடத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரும் பியுமி ஹன்சமாலி சில சிங்கள நாடகங்களிலும் நடித்துவருகிறார். இந்த நிலையில் நாடகத்துக்கான சூட்டிங்காக இருக்குமா என சிலர் சந்தேகம் வெளியிட்டாலும், அந்த காணொளி தொலைபேசியில் பதிவாகியுள்ளமை அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது.
எவ்வாறாயினும் தாக்கப்படுவது பியுமி ஹன்சமாலிதானா என்பது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
Post a Comment