தனியார் காணியில் பௌத்த விகாரை பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
தனது காணியில் தனது அனுமதி இல்லாமல் பௌத்த மடம் அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பெண் ஒருவர் தனது காணியைத் தனக்கு மீளத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் பின்புறமாக உள்ள காணியில், விகாரையைப் பராமரிக்கும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கு இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றார்.
அந்த இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் காணி தனக்குச் சொந்தமானது என்றும், அந்தக் காணியைத் துப்புரவாக்கச் சென்றபோது அருகில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்துகின்றனர் என்றும் அந்தப் பெண் கூறுகின்றார்.
Post a Comment