கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது அவசியம்
அரச பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவென்ற ஊகத்தில் பெற்றோர்
அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின் போது, மாணவர்களின் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பு 02, ரி.பி. ஜாயா கல்லூரியின் நான்கு மாடிக் கட்டடத்தில் முதல் மாடியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (04) நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்த[ பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரி.பி. என்ற நாமம் இலங்கையின் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமாக பங்காற்றியவர்களில் ஒருவராக கருதப்படுவதோடு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தவருமாவார். கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஆரம்பகால அதிபராக கடமையாற்றிய அவர் ஆற்றிய கல்விச் சேவை அவர் அரசியலில் அறிமுகமாவதற்கும் ஏதுவாக இருந்தது.
Post a Comment