நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று

நாடு முழுவதும்  ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகஅகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்ககூடிய வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை,முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில்நாடு முழுவதுமுள்ள ஆயிரத்து 74 சமுர்த்தி வங்கிகளிலும்இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  அந்த  சங்கம்  குறிப்பிட்டுள்ளது.
சமுர்த்தி ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் தொடர்பில்  தீர்மானமொன்று கிடைக்காத பட்சத்தில்எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி முதல்ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என சமுர்த்தி அமைச்சர் தயா கமகே தெரிவிக்கின்றார்.
அரச சேவைகளை முடக்க முற்பட்டால், சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் இணைக்கப் போவதாக அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் நீதியான முறையிலேயே ஊதியம் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.