"இசுற வித்தியாலய கோட்டே" பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி கட்டிடம் ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிப்பு..…
கோட்டே மாதிவல ஸ்ரீ றாகுல மகா வித்தியாலயத்தை இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பாடசாலையாக ஆக்குவதற்கு மேல் மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், அப்பாடசாலைக்கு “இசுற வித்தியாலய கோட்டே” என்று பெயர்சூட்டப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் கூடிய நான்கு மாடி கட்டிடத்தை (01) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன ஆகியோரும் மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய உள்ளிட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Post a Comment