மைத்திரியின் திடீர் முடிவு; ஆட்டங்காண்கிறதா ரணிலின் அரசாங்கம்?
அமைச்சரவை கூட்டங்களில் தான் பங்கேற்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலுமே அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மின்சார சபைக்கு எதிராக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், கருத்துரைத்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் அந்த நிறுவனம் சரிவடையும் அதேபோல, நுகர்வோர் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அப்படியாயின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment