நாட்டில் நிலவும் மின்சார தடைக்கான காரணம் வௌியானது!!!
மின்சார தட்டுப்பாட்டிற்கான காரணம் வௌியானது.
மின்சார தட்டுப்பாட்டிற்கு காரணம் , 2020 ஆம் ஆண்டு வரை தாம் சமர்பித்த மின்னாலை திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையே என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் தலைவர் குமாரவடு கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் , மின்சார தட்டுப்பாட்டிற்கு மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கும் மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் இடையில் நிலவும் முரண்பாடு காரணமில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை , மின்சார துண்டிப்பிற்கான காரணம் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாமையே என மின்சார பொது ஊழியர் சங்கம் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment