கோட்டாவுக்கு பொம்புள குடுத்த அழைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வைத்து இரண்டு வழக்குகள் தொடர்பான நீதிமன்ற அழைப்பாணைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வழைப்பாணைகள் அவரது அமெரிக்க வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்து அவரிடம் வழங்கப்படவில்லை. மாறாக அவர் கலிபோர்னியாவில் உள்ள "ட்ரேடர்ஸ் ஜோஸ்" என்ற பல்பொருள் அங்காடி வளாகத்தில் தனது கொள்வனவை முடித்துவிட்டு வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரிற்கு அருகில் வரும்போது கையில் "திணிக்கப்பட்டுள்ளது".

அதாகப்பட்டது, கோட்டா இலங்கையிலும், அமெரிக்காவிலும் வைத்த அவரது ஒவ்வொரு காலடியையும் அமெரிக்கப் புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்துள்ளனர் என்பதை இந்த அழைப்பாணை விநியோகம் நிரூபிக்கின்றது.
இனி, கோத்தாவின் அரசியல் அடி அவரது இராணுவ அடியை அழித்தாலன்றி அவரது அரசியல் எதிர்காலத்தை புலனாய்வு அமைப்புகளே தீர்மானிக்கும்.
எல்லாமே கோட்டாவின் 'செட்டப்போ' என்னவோ?
இந்திய தேர்தல் முடிவின் பின்னரே இனி எந்த எதிர்வு கூறலும் சாத்தியமாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.