மாற்றங்கள் இன்றி கடமை புரியும் ஊழியர்கள்!



மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு அரச கடமையில் 59 ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு குறையாமலும் 10 வருடங்களுக்கு அதிகமாகமலும் கடமையாற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் சாரதி அலுவலக பணியாளர்கள் குடியேற்ற உத்தியோகத்தர்கள் உட்பட 59 பேர் இதுவரை மன்னார் பிரதேச செயலகத்தின் கீழ் அரசபணியாளர்களாக தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றனர்.
அதே நேரத்தில் சுமார் 22 நபர்கள் மன்னார் நகர பிரதேச செயலகப்பிரிவிற்குள் 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருகின்றனர் குறிப்பாக முகாமைத்துவ உதவியாளர் கிராம அலுவலர்கள் சிலரே 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பிரதேச செயல பிரிவுக்குள் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முகாமைதுவ பிரிவில் இருவர் 17 வருடங்கலுக்கு மேலாகவும் ஒருவர் 22 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.