முசலிப்பிரதேச செயலக அதிகாரிகளின் செயப்பாடுகளால் பாதிக்கப்படும் வீட்டுத்திட்ட பயனாளிகள்....


முசலிப்பிரதேச பிரிவில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக 700வீடுகள் ஒதுக்கப்பட்டு அவற்றுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன .

பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் 6 கட்டங்களாக பிரிக்கப்பட்டு அந்த வேலைத்திட்டங்களுக்கான பணம் ஒதுக்கப்பட்டுவருகின்றது....

மக்கள் பிரதேச செயலகத்தின் நடைமுறைக்கு கட்டுப்பட்டு வேலைத்திட்டங்கள் முடிந்ததன் பின்னர் பணம் எடுக்க பிரதேச செயலகத்துக்கு சென்றால் அங்கு இருக்கும் அதிகாரிகைகளின் அசமந்த போக்கினால் கடனாளியாக மாறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்....

தினம் ஒரு நடைமுறை  என்ற அடிப்படையில் பிரதேச செயலக அதிகாரிகள் செயற்படுவதுடன் வங்கியில் பணம் இல்லை, நாளை வாங்க, அல்லது இரண்டுநாட்கள் கழித்து வாருங்கள், என திருப்பி அனுப்பும் நடைமுறையை பிரதேச செயலக அதிகாரிகள் மேட்கொள்ளுவதனால் மக்கள் மனவேதனையுடன் சொல்லுவதையும் கடனாளியாக நாட்களை கடத்த வேண்டிய நிலைக்கும் மக்கள் தள்ளப்படுகின்றனர்...

முசலிப்பிரதேசசெயலாக அதிகாரிகளே உங்கள் செயட்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் கஷ்ட்டத்தில் எம்மக்களை தள்ளும் இந்த விளையாட்டு செயற்பாடுகளை நிறுத்துங்கள் உங்களை நாடிவரும் மக்களுடன் நாகரிகமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள் முடிய வில்லை என்றால் மாற்றம் எடுத்து செல்லுங்கள் உயர் அதிகாரிகளுக்கு ஒரு முகத்தையும் மக்களுக்கு ஒரு முகத்தையும் காட்டும் நடைமுறையை மாற்றுங்கள்..

மக்கள் குரல் ...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.